search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலை திறப்பு விழா"

    குஜராத் மாநிலத்தில் வரும் 31-ஆம் தேதி நடைபெறும், சர்தார் வல்லபாய் பட்டேல் உருவ சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. #PatelStatue #StatueOfUnity #EdappadiPalaniswami
    சென்னை:

    இந்தியாவின் முதல் துணை பிரதரும், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்படும் தலைவருமான சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு உலகிலேயே மிக, மிக உயரமான, பிரமாண்ட சிலை குஜராத்தில் நிறுவப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு சிலை தொடக்கப்பணிகள் ஆரம்பித்தன. இதற்கு தேவையான கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தானமாக பெறப்பட்டது.

    தற்போது இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்ட நிலையில், சர்தார் வல்லபாய் பட்டேலில் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதி சிலை திறக்கப்படுகிறது. திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.

    இந்நிலையில், குஜராத் மாநில அமைச்சர் கன்பத் சின்கா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். அப்போது, சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கி, விழாவில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டனர்.



    சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். சிலையின் மொத்த உயரம் 182 மீட்டராகும். 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு உள்ள தீவில் இந்த சிலை கம்பீரமாக நிற்கப் போகிறது. இந்த சிலையை சுற்றி 12 சதுர கி.மீ. அளவுக்கு செயற்கை ஏரி உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் மிக சிறந்த சுற்றுலா தலங்களுள் ஒன்றாக மாற்ற குஜராத் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா வருகிற 31-ந்தேதி நடைபெற உள்ளது. #PatelStatue #StatueOfUnity #EdappadiPalaniswami

    ×